‘சிறியானி’க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

‘சிறியானி’க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

சிறியானி விஜேவிக்ரமவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மக்கள் ஐக்கிய முன்னணியில் இருந்து கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்காக  அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்தார்.

கடந்த 09ஆம்  திகதி வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த அவர், பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், அது அரசாங்கத்தின் சதி திட்டத்தின் பிரதிபலனாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

மக்கள் ஐக்கிய முன்னணியின் உறுப்பினராக இருக்கின்ற அவர்,  திகாமடுல்ல தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

மக்கள் ஐக்கிய முன்னணி சார்பாக கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து இருந்த அவர் கடந்த 10ஆம் திகதி, ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]