சிறப்பு மேல்நீதிமன்ற சட்டவரைவு விரைவில் கையளிப்பு

ஊழல், மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான சிறப்பு மேல் நீதிமன்றத்தை அமைப்பதற்கான சட்ட வரைவு, இந்தவாரம் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்கான சட்டவரைவு , அரச சட்ட வரைஞரினால், தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தவாரம் அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நிதிக்குற்றங்கள் மற்றும் ஊழல்கள், குறித்து விசாரிக்க இந்த நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.