வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்கு 48 பேர் கொண்ட சிறப்புச் செயலணி

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு, 48 பேர் கொண்ட சிறப்புச் செயலணி ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துவதை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் இந்த உயர்மட்ட செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் செயலணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 15 அமைச்சர்கள், இரண்டு மாகாணங்களின் ஆளுனர்கள், இரண்டு மாகாணங்களினதும் முதலமைச்சர்கள், சில அமைச்சுக்களின் செயலர்கள், முப்படைகளின் தளபதிகள், மற்றும் இராணுவ, அரச அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்புச் செயலணியின் செயலராக சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, இந்தச் செயலணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]