சிறப்பான நடைபெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் ஏழாம் நாள் திருவிழா

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவ திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலின ஏழாம் நாள் திருவிழாவானது, பெருந்திரளான பக்தர்கள் புடைசூழ நேற்று (புதன்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது நல்லூரான் காமதேனு வாகனத்திலும் வள்ளி – தெய்வானை இடப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, எம்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]