முகப்பு News சிறப்பாக கொண்டாடப்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவின் மாம்பழ திருவிழா

சிறப்பாக கொண்டாடப்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவின் மாம்பழ திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

22ஆம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகப்பெருமானும் வெளிவீதியுலா வந்தனர். அதன் பின்னர் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.

புராணக் கதைகளை சித்தரிக்கும் வகையிலேயே இந்த மாம்பழத் திருவிழா இடம்பெறுகிறது.

இன்றைய மாம்பழத் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக கூறப்படுவதோடு, இன்றைய தினம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பரத் திருவிழா நாளை மாலை 6 மணிக்கும், தேர்த்திருவிழா நாளை மறுதினம் காலை 7 மணிக்கும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com