சிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை!

2014 ஆம் ஆண்டு முதல் சர்வதேசக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு விருதுகளை வழங்கிவருகிறது.

இந்த அமைப்பு நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுளை வழங்குகின்றது.

சிறந்த நடிகர், சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய பிரிவுகளில் மெர்சல் படத்திற்காக தளபதி விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இதில் சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை அவர் பெறுவதாக செப்டம்பர் மாதம் IARA அறிவித்திருந்தது.

தற்போது இந்த விருதை பெறுவதற்கு விஜய் பிரித்தானியாவுக்கு சென்று பெற்றுள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை IARA  தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]