சிரியாவில் 500 பேர் உட்பட 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

சிரியா

சிரிய அரசு நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி மக்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அதிபரின் ஆதரவு படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கடந்த 7 வருடங்களாக அதிபர் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த சண்டையில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]