சிரியா பெண்களின் அவலநிலை -உதவி பொருட்களுக்கு பதில் உடலுறவு!!

சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை சிரியா அரசும், ரஷ்ய படையும் கடுமையான தாக்கி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சிரியாவில் பாதிக்கபட்டவர்களுக்காக ஐநா உதவிக்குழு ஏராளமான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அந்த உதவி பொருட்களை கொண்டு சென்ற குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடலுறவு வைத்து கொண்டால் மட்டுமே உதவிபொருட்கள் என்று நிபந்தனை விதித்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒருசிலர் பாதிக்கப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும்படி நிவாரண பொருட்களை கொண்டு சென்றவர்கள் கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் பல பெண்கள் நிவாரண பொருட்களை வாங்க செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை ஐ.நா மறுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]