சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!!

சிரியாவில் இடம்பெற்றுவருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

இப்போராட்டம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது

கடந்த சில நாட்களாக சிரியாவில் உள்நாட்டுப்படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் யுத்தம் காரணாமாக அப்பாவி பொதுமக்கள் குழந்தைகள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கொல்லப்படுவதை கண்டித்து இப்போராட்டம் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையினர் இவ்விடயத்தில் மௌனம் காக்காது துரித நடவடிக்கையை எடுத்து சிரியாவில் நிரந்தர போர்நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் எனவும் இங்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் வலியுறுத்தபட்டது.

யாழ் மாவட்ட இளைஞர் சமூகத்தினர் மற்றும் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பெரும்பாலானோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.