சிரியா ‘இனப்படுகொலை’யை கண்டித்து கிளிநொச்சியில் கண்டன, கவனயீர்ப்பு போராட்டம்!!

சிரியா இனப்படுகொலையை கண்டித்து ‘கிளிநொச்சி’யில் கண்டன, கவனயீர்ப்பு போராட்டம்!!

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகளை கண்டித்து ‘கிளிநொச்சி’யிலும் இன்று(01) கண்டன கவனயீர்ப்பு போராட்ம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறிப்பாக சிரியாவில் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை இவர்கள் வெளிப்படுத்தியினர்.

ஜநாவே உனது கள்ள மௌனத்தை களை, ஈழத்திலிருந்து சிரியாவுக்கு குரல்,பொது மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்து, சிரியாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கு,2009 முள்ளிவாய்க்கால், 2018 இல் சிரியா, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கண்டன கவனயீர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]