சிரியாவிலிருந்து ஆரம்பம் ஆகிறதா மூன்றாம் உலகப்போர்!

வல்லரசு நாடுகள் தன்வரையறைக்குள் இருந்து தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளமுடியாத காலங்களில் அந்நிய நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயன்றதோடு, பல வெற்றிகளையும் கண்டது.

இந்த பாணியில் இரண்டாம் உலக போரில் ஏற்பட்ட பெரும் உயிர் மட்டும் பொருட் சேதங்களின் பின்னர் உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை எனும் நிறுவனத்தை நிறுவி ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தன அதுதான் உலக நாடுகளின் சமாதான சாசனமாக கருதப்பட்டது.

அதிலிருந்து இன்று வரை வல்லரசு நாடுகள் ஒன்றுக்கொன்று முட்டி மோதி கொள்ள முயன்றாலும் பெரும் யுத்தத்திற்கு உள்நுழையவில்லை ஆனால் இப்போது சிரியாவில் நடந்து கொண்டிருக்கும்  உள்நாட்டு யுத்தம் மூன்றாம் உலக யுத்தத்தின் ஆயத்தமா என சந்தேகிக்க வைக்கிறது. இப் போரில் அமெரிக்கா, ரஷ்யா, சவூதி அரேபியா, ஈரான் ,வட கொரியா போன்ற நாடுகள் மூக்கை நுழைத்திருக்கின்றது. இதன் அடிப்படையில்தான் உள்நாட்டு யுத்தம் சர்வதேச யுத்தமாக மாறியதா என்ற சந்தேகத்தில் யோசிப்போருக்கு பதில் கீழே…

இனி இந்த சிரியாவின் வரலாற்றை ஆராய்ந்து பார்ப்போம்

கிட்டத்தட்ட 1900ஆம் ஆண்டுகளில் முஸ்லீம்களின் பெரும் பிரிவுகளான ஷியா மற்றும் சுன்னி முஸ்லீம் இனங்கள் பிரிந்து இரண்டு பெரும் நாடுகளை உருவாக்கியது இதில் ஒன்று சவுதி அரேபியா மற்றயது ஈரான். சவுதி அரேபியாவில் சுன்னி முஸ்லீம்களை அடிப்படையாக கொண்டு மன்னர் ஆட்சி முறைமை உருவாக்கப்பட்டது அதே நேரம் ஷியா முஸ்லீம்களை அடிப்படையாக கொண்டு ஈரான் நாடு மக்கள் ஆட்சி முறைமையை உருவாக்கியது.

இந்த பெரும் நாடுகளுக்கு மத்தியில் தான் சிரியா மற்றும் ஈராக் போன்ற சிறிய நாடுகள் அமைந்திருக்கின்றன.சிரியா அண்ணளவாக இரண்டரை கோடி மக்கள் தொகையை கொண்ட நாடு. இங்கு எண்ணெய் வளம் நிறைந்து இருப்பதோடு  மட்டும் அல்லாது அரபு நாடுகளுக்கான கடல் வழி வியாபாரமும் சிரியாவின் ஊடாகவே நடக்கிறது.  செல்வம் நிறைந்த அரபு நாடு என்பதாலும் இந்நாட்டில் இருந்து இஸ்ரேலினை வேவு பார்க்க முடிவதனாலும் உலக நாடுகள் இந்நாட்டின் மீது பார்வையை செலுத்தி இருக்கின்றன.

இவ்வாறு அமெரிக்காவின் கிளர்ச்சியில் இருந்து முஸ்லீம் நாடுகளை பாதுகாத்து வந்த சதாம் உசைனை தீவிரவாதியாக சித்தரித்து கொன்ற வரலாற்றை இங்கு மிக எளிதில் மறக்க முடியாது.

சிரியா உள்நாட்டு கிளர்ச்சிக்கான காரணங்கள்

சிரியாவின் தலை நகரான டாமஸ்கரில் இருந்து கடந்த 48 வருடகாலமாக குடும்ப ஆட்சி முறை நிலவியது அதிலும் முதல் 30 ஆண்டுகள் 1970ஆம் ஆண்டிலிருந்து 2000மாம் ஆண்டு வரை ஹபீசும் அதன் பின் அவர் மகன் பஷர் அல் ஹசனும் ஆட்சிபொறுப்பை ஏற்று சிரியாவை ஆட்சி செய்தார்கள்.

இந்த ஆட்சியின் கீழ் பொருளாதார வளர்ச்சியின்மை, மக்களுக்கு வேலை வாய்ப்பின்மை ,சுகந்திரமின்மை போன்ற காரணிகள் கிளர்ச்சியை தூண்டியது.அதிலும் ஷியா, சுன்னி, குர்தீஸ், அராபிய முஸ்லீம் இன மக்களுக்கு மத்தியில் இந்நாட்டில் வாழ்வோரில் சுன்னி இன மக்களே அதிகளவில் உள்ளனர். இதனால் ஷியா முஸ்லிம்களின் ஒருவர் தொடர்ந்து தலைவராக இருப்பது அந்நாட்டு பெரும்பான்மை இனமான சுன்னி இன முஸ்லீம் மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது.

கிளர்ச்சி உள்நாட்டு யுத்தமாக காரணங்கள்

சிறு கிளர்ச்சியை பெரும் யுத்தமாக மாற்றியதில் பெரும் பங்கு அமெரிக்காவை சாரும். பொருளாதார தடைகளை சிரியா நாட்டுக்கு விதிப்பதும், அரசுக்கு அழுத்தங்களை கொடுப்பது என பெரும் பங்கு வகித்தது அமெரிக்கா.2011ம் ஆண்டு ஜனவரி மாத கால பகுதியில் சிரிய அரசுக்கு எதிராக ஏற்றப்படுத்தப்பட்ட கிளர்ச்சியில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

பின்புலத்திலிருந்து அதற்கான உதவிகளை அமெரிக்கா வழங்குவதாக ரஷ்யா செய்தி வெளியிட்டு இருந்தது.இதற்க்கு பின்னரே கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராட முடிவு செய்தனர்.

இதன் பின்னணியில் சவுதி அரேபியாவின் எண்ணெயையை வளத்தை தன் வசபடுத்தியிருந்த அமெரிக்கா உலக போட்டி சந்தையில் மசகு எண்ணெய்க்கான விலையினை நிர்ணயம் செய்வதில் ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்துவதற்றுக்காக, இச் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்தி எண்ணெய் வள நாடுகளில் மேலும் முறுகலை ஏற்படுத்தியது.

உள்நாட்டு யுத்தம் உலக நாடுகளிடம் கைமாறல்

கிளர்ச்சியாளர்களிடம் தன் ராஜ தந்திரத்தினை பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களை தன்வசப்படுத்திய அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து அரசுக்கெதிரான மாபெரும் படையை உருவாக்கியது.

அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யா சிரிய அரசுக்கு ஆதரவாக யுத்தகளத்தில் குதித்தது. இதன் பின்னியாக இரண்டாம் உலகப்போரின் போது ரஷ்யாவிற்க்கு  சிரிய ஆதரவாக செயற்பட்டது இந்த சிரிய அரசு, என்பதை காரணமாக்கிகொண்டே யுத்தத்தில் உள் நுழைந்தது ரஷ்யா. யார் சிரிய ஆட்சியாளன் ? என்ற போட்டியை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமக்கிடையே ஏற்படுத்திக்கொண்டே யுத்தத்தை மேலும் விரிவுபடுத்தினர்.

முஸ்லீம்களை பலவீனமாக்கும் மத உட்பிரிவுகளை அடிப்படையாக கொண்ட நாடுகளான சவூதி அரேபியா மற்றும் துருக்கி அரச கிளர்ச்சியாளர்கள் பக்கமும், ஈரான் அரசுக்கு ஆதரவாகும் செயற்படுகின்றன.இங்கு குர்தீஷ் இன மக்களுக்காக துருக்கியும், சுன்னி முஸ்லீம்களுக்காக சவூதி அரேபியாவும் அரச கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். மறுமுனையில் ஈரான் ஷியா முஸ்லீம்களுக்காக அரசோடும் இணைந்தன.இந்த முஸ்லீம் நாடுகள் கூட பிராந்தியத்தில் யார் ஆள்வது என்பதற்காகவே போரில் முனைப்பு காட்டுகின்றன.இரண்டு வருடமாக அரசுக்கு மறைமுக ஆதரவினை வடகொரியா வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலான உள்நாட்டு யுத்தம் 

அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட கிளர்ச்சியாளர்களின் ஒரு பகுதியினர் ஈராக்கில் உள்ள தீவிரவாத படைகளோடு கைகோர்த்தனர்.இதன் பின்பு மிகவும் சக்கிவாய்ந்த ISIS என்ற ஒரு தீவிரவாத அமைப்பை உருவாக்கினர்.இவர்கள் உலக நாடுகளான பிரான்ஸ், பாரிஸ் போண்ட ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தினார்கள்.

இன்று சிரியாவின் அலெப்போ மற்றும் இட்லிப் பகுதிகளிலும் ஈராக்கின் மோசுல் நகரிலும் யுத்தம் விரிவடைந்திருக்கிறது. இங்கெல்லாம் உள்ள தீவிரவாத அமைப்புக்களான ஹிஸ்புல்லா இயக்கம்,குர்தீஷ் இனக்குழுவும், ISIS தீவிரவாதிகள் இணைந்து போரிடுகின்றனர்.இன்றைய சிரியாவின் நிலை ஜப்பானின் ஹிரோஸிமா ,நாகசாகி நகரில் நடத்தப்பட்ட கொடூரத்தை நினைவுபடுத்துவது போல் இந்த யுத்தம் அமைகிறது.

இதனால் உலக நாடுகளின் அதிகார ஆசைக்கு கரி பூசும் விதமாக தீவிரவாதிகளின் கைகோர்ப்புக்கு பின் யுத்தம் திசைதிருப்பபட்டு உலக நாடுகளின் தீவிரவாத்திற்க்கு எதிரான யுத்தமாக மாற்றப்பட்டிருக்கிறது.

உள்நாட்டு யுத்தம் இன்று உலக மக்களின் கண்ணீரோடு

கிட்டத்தட்ட 07 வருடமாக ஆறு இலட்சம் மக்களை கொன்று குவித்த இந்த யுத்தம் காரணமாக 130 இலட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டும் இருக்கிறார்கள். இவர்களில்  80 லட்சம் பேர் உள்நாட்டிலும் 50 லட்சம் பேர் வெளி நாட்டிலும் அகதிகளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

முஸ்லிம் நாடுகளின் மக்கள் தீவிரவாதியாக்கப்பட்டு கொல்லப்படுவதும், தனது ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்த அமெரிக்கா கிளர்ச்சியாளர்களை தூண்டிவிடுவதும், ரஷ்ய விமான குண்டுகளையும், வடகொரியா கப்பல் கப்பலாக கமிக்கல் குண்டுகளையும் வழங்கி மக்களை பழிவாங்குவது ஏதற்றகாக? மூன்றாம் உலக போருக்கு நகர்த்தப்படுகிறதா சிரிய யுத்தம்???

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]