சியானின் ஜல்லிக்கட்டு பதிவு.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் உணர்வு கொண்ட அனைத்து இளைஞர்களும் நேற்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு கொலிவுட் திரையுலகினர் அனைவருமே நேரிலும், சமூக வ்லைத்தளங்கள் மூலமும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சீயான் விக்ரம் இதுகுறித்து கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எனது ஆசை, எண்ணம். அதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக மாணவ, மாணவியருக்கும் எனது நெஞ்சார்ந்த முழு ஆதரவு

இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சிற்து அளவும் சந்தேகமில்லை’ என்று விக்ரம் கூறியுள்ளார்.