மல்ட்டி டேலண்டட் பற்றி விவாதிக்கும் போதும் நினைவுக்கு வரும் பெயர் சிம்பு தான்

மல்ட்டி டேலண்டட் பற்றி விவாதிக்கும் போதும் நினைவுக்கு வரும் பெயர் சிம்பு தான்.

சிம்பு

மல்ட்டி டேலண்டட் என்ற வார்த்தையை பற்றி விவாதிக்கும் போதும், நினைக்கும் போதும் நம் நினைவுக்கு முதலில் வரும் பெயர் எஸ்டிஆர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற சிம்புதான்.

சிம்பு

மற்றவர்களுக்கு பொறாமையூட்டும் ரசிகர் படையை கொண்ட சிம்பு, நடிப்பு மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளையும் கொண்டிருக்கிறார். உண்மையான திறமை இருந்தால் தான் இத்தனை துறைகளிலும் சிம்புவை போல ஜொலிக்க முடியும்.

சிம்பு

பாடகராகவும் தன்னை நிரூபித்த சிம்பு, தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற சக ஹீரோக்கள், வளரும் நடிகர்களின் படங்களிலும் பாடல்களை பாடியிருக்கிறார்.

அவற்றில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி, ட்ரெண்டிங் ஆனதே சிம்புவின் இசை அறிவையும், கணிப்பையும் பறை சாற்றுகிறது.

சிம்பு

“மோனிஷா என் மோனலிஷா” படத்தில் முதல் பாடலை பாடிய சிம்பு, தன் பெருமையான இசை பயணத்தில் “என் ஆளோட செருப்ப காணோம்” படத்தின் மூலம் 100 பாடல்கள் பாடிய பெருமையையும் பெற்றிருக்கிறார்.

100 பாடல்கள் என்ற மைல்ஸ்டோனை எட்டியிருக்கும் சிம்பு அதை பற்றி கூறும்போது, “பாடல்கள் பாடுவது எப்போதுமே எனது ஆர்வம், என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது.

சிம்பு

பெரும்பாலான சூப்பர் ஹிட் பாடல்கள் நான் பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 பாடல்களை பாடியிருக்கிறேன் என்பதை உணரவே இல்லை.

இந்த பயணத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், உடன் பாடிய பாடகர்கள் ஆகியோருக்கு என் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிம்பு

நான் எப்போதுமே கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடையவன், எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலை செய்திருப்பது இசையில் பரந்த மற்றும் பெரிய புரிதலை கொடுத்திருக்கிறது.

சிம்பு

எந்த அவதாரத்தில் நான் இருந்தாலும் என்னை ஏற்றுக் கொண்டு ஊக்கப்படுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி.

என்னை பொறுத்த வரையில் 100 என்பது சாதாரண ஒரு நம்பர் தான், ஆனாலும் இந்த நேரத்தில் பெருமையாக உணர்கிறேன். சினிமா என்பது என் வாழ்க்கை மற்றும் உயிரோடு கலந்த ஒன்று.

சிம்பு

எனக்கான தனி ஒரு இடத்தை அடைய மிகவும் கடுமையாக உழைப்பேன் என்றார் தன்னம்பிக்கையோடு.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]