சிம்பு பட நடிகைக்கு வந்த சோதனை! சோப்பு விற்க கிளம்பிட்டாராம் …

ஜீவா நடிபில் 2005 ஆண்டு வெளியான ஈ படத்தின் மூலம் துணை நடியாக தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சனா கான். பின் 2008ம் ஆண்டு வெளியான சிலம்பாட்டம் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை சனா கான் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து பின் திரைத்துறைக்கு வந்தார். அவர் தென்னிந்தியத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

சிலம்பாட்டம் படத்திற்கு பிறகு பரத் நடிப்பில் வெளியான தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். இறுதியாக தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான AAA படத்தில் நடித்திருந்தார்.

இதன் பின்பு, சில ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் சொந்தமாக சோப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

தற்போது, தனது சோப்பு நிறுவனம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை சனா கான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]