சிம்பு படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உலகம் முழுவதும் நாளை முதல் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

AAA Movie

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ஏஏஏ படத்தின் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு நாளை (ஜுன் 23) ரிலீசாகிறது. இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்திருக்கிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா பாட்டியா, சானா கான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

சிம்பு படத்தை ரிலீஸ்

இதுதவிர யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 450 திரைகளில் படம் ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் படம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தள்ளுபடி செய்ததுடன் படத்தை ரீலீஸ் செய்ய தடையில்லை என்றும் உத்தரவிட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]