சிம்பு, திரிஷா மற்றும் வடிவேல் மீது புகார்

சிம்பு, திரிஷா மற்றும் வடிவேல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார்

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் சிம்பு நடித்தார்.

இந்த படத்தின் முழு படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்கவில்லை. பாதி படத்தில் நடித்தவரை அத்துடன் ஒரு பாகமாக வெளியிடும்படி சிலம்பரசன் தெரிவித்திருந்தாராம்.

மேலும் பாதி படத்தை இரண்டாம் பாகமாக வெளியிட திட்டமிட்டனர். இந்நிலையில் முதல் பாகமே பெரும் நஷ்டத்தை கொடுத்தது. இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இதேபோல் “சாமி 2” திரைப்படத்தில் நடிக்க திரிஷா ஒப்புக்கொண்டார். சில காட்சிகளிலும் நடித்த நிலையில் அவர் விலகி இருக்கிறார் என்றும் இதனால் படத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

imsai arasan 24m pulikesi

இதேவேளை “இம்சை அரசன் 24ம் புலிகேசி” திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரிப்பதுடன், சிம்புதேவன் இயக்குகிறார்.

படக்குழுவுடன் வடிவேலுவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதுடன், படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதுடன், இதில் திரிஷா பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

trisha-krishnan

தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]