சிம்பு தயாரிப்பாளர்களை தாக்கி ஆவேசமான பேச்சு

கடந்த சில மாதங்களாக எந்தவொரு நடிகர் சங்க கூட்டங்களிலும் கலந்து கொள்ளாது இருந்த சிம்பு அண்மையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர்கள் சங்க கூட்டத்தின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் தயாரிப்பாளர்களை குற்றம் சுமத்தி ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

SIMBU

அதில் அவர் “ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குத் தெரிய வேண்டும்.சில தயாரிப்பாளர்கள் கருப்பு பணத்தை திரைப்பட தயாரிப்பிற்கு பயன்படுத்துகிறார்கள். அவர்களின் கறுப்புப் பணத்தை ஒழியுங்கள் அனைத்துமே சரியாகிவிடும்” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

நடிகர்கள் அதிகம் சம்பளம் கேட்பதால் தான் பட்ஜெட் அதிகமாகிறது என்று சில தயாரிப்பாளர்கள் கூறிவந்த நிலையில்,தயாரிப்பாளர்களிடம் நிறைய கருப்பு பணம் முடங்கி இருப்பதாக சிம்புவின் பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]