சிம்பு தம்பி மதம் மாறியதற்கான காரணம் வெளியானது- அட இதற்காகத்தானா??

பல்கலை வித்தகர் டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன்,சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

2016 ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர், பி.எஸ்சி. (விஸ்காம்) படித்துள்ளார்.

இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்யவுள்ளார் குறளரசன்.

இதற்காகத்தான் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன். ஆனாலும், குறளரசன் என்ற தன்னுடைய பெயரை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

மணப்பெண்ணின் பெயர் நபீலா ஆர். அஹமத். பி.காம். முடித்துள்ள நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் – ரெஹ்மத் அஹ்மத்.

இவர்களுடைய திருமண வரவேற்பு, ஏபரல் 29,2019 ஆம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அழைப்பிதழ் கொடுக்கும் படம் மேலே.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]