சிம்பு தனுஷ் பெயரில் உருவாகும் புதிய படம்!

 

சிம்பு தனுஷ் பெயரில் உருவாகும் புதிய படம்!

இன்றைய தமிழ் சினிமாவில் இளவட்ட ட்ரெண்டில் இருக்கும் நடிகர்கள் சிம்பு தனுஷ். இவர்களுக்கு என்று ஒரு இரசிகர்  பட்டாளம் உருவாகி வருகின்றது, இந்நிலையில் தற்போது காதலில் சிம்பு தனுஷும் என்று பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.

இதில்  நடித்த அனைவரும் புதுமுகங்கள். இப்படத்தில் தனுஷ் சிம்பு பேசிய பல பன்ச் வசனங்கள் இந்த புதுமுகங்கள் பேசியுள்ளார்களாம், அதுமட்டுமில்லாமல் சிம்புவின் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன், தனுஷின் வட் எ கருவார்ட் போன்ற பாடல்களும் இடம்பெற்றுள்ளதாம்.

இவர்களை தவிர்த்து படத்தில் கஞ்சா கறுப்பு , அப்புக்குட்டி போன்றவர்கள் நடித்துள்ளனர். அதே சமயம் நடிகர் சிம்புவை சந்தித்து ஒரு பாடலை பாடித்தருமாறு கேட்டார்களாம், உடனே சிம்பு ஒப்புக்கொண்டதாகவும்  சொல்லப்படுகின்றது.