சிம்புவை பழிவாங்குகிறாரா விஷால்? குமுறும் ராதாரவி

கடந்த சில நாட்களாகவே தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியிருப்பது நாம் அறிந்தவிடயமே. இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்க்கு செவ்வி வழங்கிய நடிகர் ராதாரவி என்ன சொல்லியிருக்கிறார் வாங்க பார்போம்.


நடிகர் ராதாரவியும் அவருக்கு சார்பானவர்களும் போன நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியிடம் தோல்வியடைந்துயிருந்தாங்க, இந்த சூழ்நிலையில்தான் நடிகர் சிம்பு தான் நடித்த திரைப்படத்திற்கு 3 கோடிகளை தயாரிப்பாளருக்கு கொடுத்துவிட்டு, அதனை திரும்ப பெற முடியாமல் இருப்பதாக வழங்கிய மனுவை விஷால் கண்டுகொள்ளவில்லையென, சிம்பு ஆதாங்கப்படுவதாக ராதாரவி பேட்டியொன்றினை வழங்கியிருக்கிறார். சிம்பு தனக்கு சார்பாக நடிகர் சங்க தேர்தலில் செயற்பட்டதுதான் பழிவாங்களுக்கு பின்னனி காரணமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்.

மேலும் கியுப் வேலை நிறுத்தம் பராட்டகூடியதுதான் இதனால் மக்கள் பலனடைவார்கள் என்றும்,  நடிகர் சங்கத்தில் செயலாளராகவும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தம்பி விஷால் இருப்பது, இரண்டு பக்கங்களுக்கும் முழுமையான பலன் அழிக்காது என்றும், விஷால் ஊழல் நிறைந்த ஆட்சி செய்கிறார் என்றும் கருத்துக்களை வெளியிட்டுயிருக்கிறார்.