சிம்புவின் குரலில் மீண்டும் ஒரு குத்துப்பாட்டு- கொக்கா மக்கா’ பாடல் உள்ளே

பன்முகத் திறமை கொண்ட நடிகரான சிம்புவின் குரலில் உருவான பாடல்கள் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்துவிடும். அப்படியொரு சூப்பர் ஹிட் பாடலுக்கு ரசிகர்கள் நீண்ட நாளாக காத்திருந்த நிலையில், அந்த ஆசையை நிறைவேற்றி இருக்கிறது ‘கொக்கா மக்கா’ எனும் பாடல்.

ஜானகிராமன் இயக்கத்தில் மெட்ராஸ் கலையரசன், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டைட்டானிக். இப்படத்தில் இடம் பெற்றுள்ள கொக்கா மக்கா எனும் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.

சிம்பு மற்றும் சூப்பர் சிங்கர் பிரகதி குரலில், கேட்பவர்களை குத்தாட்டம் போட வைக்கும் இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]