சிம்புவின் காதல் ஆசை!

காதல் மீதான நம்பிக்கை தனக்கு என்றுமே போகாது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் நடிகை நயன்தாராவை காதலித்தார். ஆனால் அந்த காதல் முறிந்துபோனது. அதன் பிறகு ஹன்சிகாவை காதலித்தார். ஹன்சிகாவும் அவர் வாழ்க்கையில் நிலைக்கவில்லை.

இந்நிலையில், காதல் என்று வந்தாலே தோல்வியில் முடிகிறதே, இன்னும் காதல் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? என சிம்புவிடம் கேட்கப்பட்டது.

இதற்கு சிம்புவின் பதில், என்றைக்குமே காதல் மீதான நம்பிக்கை போகாது. நான் காதலில் விழுந்து கொண்டே தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், என்னை பிடித்து, வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருக்கும் பெண்ணை முதலில் பார்க்க வேண்டும். அதுவரை நான் காத்திருப்பேன் என சிம்பு தெரிவித்துள்ளார்.