சினிமாவில் பாலியல் தொல்லை உண்டு: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அனுபமா

சினிமாவில் பாலியல் தொல்லை உண்டு: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அனுபமா

சமீப காலமாக ஸ்ரீரெட்டி பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது தற்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மைதான் என்று கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தனுஷின் கொடி திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு, கன்னட படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அன்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அனுபமா, சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மைதான் என்றும், ஆனால் தான் அதை எதிர்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், ‘பாலியல் தொல்லை பிரச்சினைகள் இப்போது வரை எனக்கு ஏற்படவில்லை. திரைப்படங்களில் நடிக்க நிறைய புதுமுக நடிகைகள் வருகிறார்கள். அவர்கள் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளை சந்திக்க நேர்கிறது.

பாலியல் தொல்லைகளை ஏற்றுக்கொள்வதை தடுக்கும் வரை அவற்றை தடுக்க முடியாது என்பது எனது கருத்து.

என்னை சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்மீது அன்பு செலுத்துகிறார்கள். மரியாதையும் கொடுக்கிறார்கள். எனவே எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.

மாடர்னாக இருப்பதிலும், குட்டை பாவாடை அணிவதிலும் அழகு இல்லை. திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதில் தான் அழகு இருக்கிறது.

சினிமா துறையில் நடிகைகளுக்குள் போட்டி இருக்க வேண்டும். அதுதான் நடிகைகளுக்கான சிறந்த ஊக்க சக்தி.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]