சித்திரை மாதத்தில் பெரும் சிக்கலில் சிக்கபோகும் ராசிகாார்கள் இவர்கள்தான்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!!

மேஷராசி அன்பர்களே!

1-ல் சூரியன், 1,2-ல் சுக்கிரன்; 4-ல் ராகு; 7-ல் குரு (வ); 9-ல் சனி; 9,10-ல் செவ்வாய்; 10-ல் கேது; 12, 1 -ல் புதன்சுக்கிரன், குரு மாதம் முழுவதும், ஏப்ரல் 30-க்குப் பிறகு செவ்வாயும் நன்மை தருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிரச்னைகள் தீர்ந்து மனம் நிம்மதியடையும். காரியங்களில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகி, காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தவறான நண்பர்களைப் புரிந்துகொண்டு விலகிவிடுவீர்கள்.

உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் தவற்றை உணர்ந்து மீண்டும் வந்து பேசுவார்கள். சகோதர வகையில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அன்னியோன்னியம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். ஆனால், உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்குப் பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.

தொழிலதிபர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பல வகைகளிலும் அனுகூலமான மாதம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு எதிரிகள் வகையிலிருந்து வந்த தொல்லைகள், முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதுடன் பணவரவும் கணிசமாக அதிகரிக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. குழப்பமான நேரங்களில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனையைப் பெறுவது எதிர்காலத்துக்கு நல்லது. பெண்களுக்குக் கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் மரியாதை அதிகரிக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷப ராசிக்காரர்களே!

12-ல் சூரியன்; 12,1-ல் சுக்கிரன்; 3-ல் ராகு; 6-ல் குரு(வ); 8-ல் சனி; 8,9-ல் செவ்வாய்; 9-ல் கேது; 11, 12-ல் புதன் மாதம் முழுவதும் சுக்கிரன் மற்றும் ராகுவும், மாத முற்பகுதியில் புதனும் அனுகூலப் பலன்களைத் தருவார்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால், எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.

மற்றபடி பிரச்னை எதுவும் இருக்காது.உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும். மாத முற்பகுதியில் தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். தேவையில்லாத சகவாசத்திலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். ஷேர் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தை விரிவுபடுத்தலாம். ஆனால், வீண் செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டியாளர்களைச் சமாளிக்க கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். பணியாளர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆனால், வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் இடமாற்றத்தையும், சிலர் பொல்லாப்பையும் சந்திக்கலாம். பொறுமையுடன் அனுசரித்து போகவும். வேலையில் கவனமாக இருக்கவும்.

பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். சிலருக்கு வேண்டிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்குப் புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாதக் கடைசியில் எதிரிகளால் தொல்லையும், போட்டியும் அதிகம் இருக்கும். பொது நல சேவகர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள் மாத ஆரம்பத்தில் முன்னேற்றப் பாதையில் செல்வர். ஆசிரியர்களிடம் நற்பெயர் பெறுவர். பிற்பகுதியில் புதன் சாதகமற்ற நிலைக்குச் செல்வதால், சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை. பெண்மணிகளுக்குக் குடும்பத்தை நிர்வகிப்பதில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், அதனால் பெரிதும் பாதிப்பு இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்குத் தற்காலிக இடமாற்றம் உண்டாகும்.

மிதுன ராசிக்காரர்களே!

11-ல் சூரியன்; 11,12-ல் சுக்கிரன்; 2-ல் ராகு; 5-ல் குரு(வ); 7-ல் சனி; 7,8-ல் செவ்வாய், 8-ல் கேது; 10,11-ல் புதன் சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் மாதம் முழுவதும் நற்பலன்களைத் தரக் காத்திருக்கிறார்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.. தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த பிரச்னை சுமுகமாக முடியும். சிலருக்குப் பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

சிலருக்கு விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். குடும்பத்தினருடன் வெளி மாநிலங்களிலுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்குத் தொழில் அபிவிருத்தி அடையும். வியாபாரத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். பணியாளர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்னைகள் வந்தாலும், இருக்கும் இடம் தெரியாமல் போகும். சிலருக்கு உன்னதமான பலன்கள் ஏற்படும். எதிலும் வெற்றி காணலாம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். வசதிகள் பெருகும். சக கலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.

மாணவர்களுக்கு குரு பக்கபலமாக இருப்பதால் நல்ல வளர்ச்சி காணலாம். சிறந்த மதிப்பெண்ணுடன் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குப் பிரச்னை எதுவும் இருக்காது. தேவையான பணம் கிடைக்கும். உறவினர்களிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

கடக ராசிக்காரர்களே

10-ல் சூரியன்: 10,11-ல் சுக்கிரன்; 1-ல் ராகு; 4-ல் குரு(வ); 6-ல் சனி; 6,7-ல் செவ்வாய், 7-ல் கேது; 9,10-ல் புதன் சூரியன், சுக்கிரன், சனி, ஏப்ரல் 29 வரை செவ்வாய், மே 2 முதல் புதன் ஆகியோர் நற்பலன் தரக் காத்திருக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கும். காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்குவதுடன் புதிய முயற்சிகளும் அனுகூலமாக முடியும். செல்வாக்கு அதிகரிக்கும்.திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கைகூடி வரும். வீட்டில் இருந்த பிரச்னை, உறவினர்களிடையே கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு முதலியன நீங்கும். ஆனால், உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். கணவன் – மனைவிக்கிடையே பாசம் மேலோங்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை சுமுகமாக முடியும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை, வங்கிக் கடன் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவர்களின் சாமர்த்தியத்தால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அலுவலகத்திலிருந்து வந்த அலைச்சல், பணிச்சுமை குறைவதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிர்வாகத்திடம் முக்கிய கோரிக்கை வைப்பதற்கு உகந்த மாதம். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். அரசாங்க விருதுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குக் கடுமையாக உழைத்துப் படிக்கவேண்டியிருக்கும். பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பைப் பெறுவர். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]