சித்தர் பெருமக்களின் பாதரசக் கலை

ஆக்கம் : R.யரனியா

அதன் நடுவிலிருக்கும் பகுதிகள் ஆவியாகிக் குளிர்ந்தவுடன் சில வகைப் பொருட்கள் கிடைக்கின்றன. அப்படிக் கிடைப்பதுதான் பாதரசம். இது

இரசமாகவோ இலிங்கமாகவோ கிடைக்கின்றது. ஸ்பெயின், கலிபோர்னியா, இத்தாலி,

ரஷ்யா, சீனா, ஜப்பான் முதலிய நாடுகளில் இது கிடைக்கின்றது. இயற்கையான தாதுப் பொருட்களாகக் கிடைக்கும் இலிங்கத்திலிருந்து கிடைக்கும் இரசமே சுத்தி செய்த இரசத்திற்கு ஈடானது. வீரம், பூரம் முதலியவைகளிலிருந்தும் எடுத்துச் சிலர் மருந்து செய்கின்றனர்.

இரசமானது ஐந்து வகைகளாகக் காணப்படுகின்றது. அவையாவன,

1. இரசம் – இது சுத்தமான இரசத்தைக் குறிப்பது. இலேசான செந்நிறம் உடையது. குற்றமில்லாதது.

2. இரசேந்திரன் – இது சற்றுக் கருமை நிறமுடையது. இதுவும் தூய்மையானது.

3. பாரதம் – இது வெள்ளியைப் போன்ற நிறமுடையது. இது குற்றமுள்ளது. இதன் குற்றத்தைச் சுத்தி செய்தால் மட்டுமே இரசமணி கட்டப் பயன்படும். இது சாதாரண கடைகளில் கிடைக்கும்.

4. சூதம் – இது சிறிதளவு வெளிர் மஞ்சள் நிறமுடையது. இதிலும் தோஷமும், குற்றமும் உள்ளது. இதனையும் சுத்தி செய்ய வேண்டும்.

5. மிசரகம் – இது சற்றுத் தாழ்ந்த நிலையில் உள்ளது. இதிலும் தோஷமும், குற்றமும் உள்ளது. இதையும் சுத்தி செய்ய வேண்டும். சாதாரணக் கடைகளில் கிடைக்கும்.

இயற்கையிலேயே இரசத்திற்கு இரண்டு வகைத் தோஷங்கள் உண்டு. ஒன்று, தோஷம் (குற்றம்) என்றும், மற்றொன்று சட்டை (கவசம்) என்றும் கூறப்படுகின்றது. இரசத்திற்கு

எட்டு வகையான தோஷமும், ஏழு வகையான சட்டையும் உண்டு என்று சித்தர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இதனை,

“உண்டீனங் கௌடில்யம் ஓதும நவரத்தம்……

விளுமெண் ரசதோடம் வேறு”

என்ற பாடலின் மூலம் அறியலாம். இங்கு உண்டீனம், கௌடில்யம், அனவர்த்தம், சங்காரம், சண்டத்துவம், பங்குத்வம், சமலத்வம், சபிஷத்வம் என்ற எட்டு விதமான தோஷம் உண்டு என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தேரையர் சர்ப்பம், வங்கம், காந்திவன்னி, சாஞ்சலம், மலம், காளம், மந்தம் என எட்டு வகைத் தோஷங்களை நிரற்படுத்துகின்றார். நாகம், வங்கம், காந்தி, வன்னி, சாஞ்சலம், விடமம், லோகம் ஆகிய ஏழு தோஷங்கள் இருப்பதாக அகத்தியர் கூறுகின்றார். தேரையர் எழுதிய தோஷம் போக்கும் முறைகள் கிடைக்காததால் அகத்தியர் எழுதிய ஏழு வகைத்தோஷ முறையே தற்போது காணப்படுகின்றது. தோஷம் நீங்கிய பிறகு ஏழுவகைச் சட்டைகளையும் போக்க வேண்டும்.

இரசத்தில் ஏழு சட்டைகள் உள்ளதாகச் சித்தர்கள் உரைக்கின்றனர். இந்த ஏழு சட்டைகள் என்று சித்தர்களால் சொல்லப்படுவது இரசத்தில் கலந்துள்ள மாசுக்களான தாதுப் பொருட்களையே ஆகும். சித்தர்கள் இவற்றினையே சட்டைகளாக வரிசைப்படுத்தியுள்ளனர். அவையாவன, நாகம், வங்கம், அக்கினி, மலம், விடம், கிரி, சபலம் என்பவையே ஆகும். இதனை மேல் வரும் பாடல் மூலம் அறியலாம்.

“ஏதுவாய் நின்ற எழிலான சூதத்தில்

கோதுவாய் நின்ற குவில மயலேழுமே…….

பாகாய் கழுவி பதனமாய் வாங்கிட்டே” –

(திருமூலர் 600, செய்யுள் 524,25)

பாதரசத்தின் நன்மைகள் :

உடல் தேற்றல், உடல் உரமாக்கல், மலம் போக்கல், பித்த நீர் அகற்றல், வீக்க முறுக்கல், உமிழ்நீர்ப் பெருக்கல், சிறுநீர் பெருக்கல், மேகநீர் போக்கல் என்பன இதன் செயல்களாகும். சித்தர் பெருமக்களின்கண்நோய், கிரந்தி, எண்வகைக் குன்மம், சூலை, தொழுநோய் முதலியன போக்கும். இரத்தச் சுத்தி, பசித்தூண்டல், கிருமிகளைக் கொன்று புண்களை ஆற்றல், மூளைக்கு கவன சக்தியைத் தருதல், மனதைச் சீர்படுத்தி அறிவை வளர்த்தல், நீண்ட ஆயுளை வளர்த்தல் என்பன இதன் சிறப்புச் செயல்களாகும்.

உடல் முழுவதையும் அல்லது உள்ளும் புறமுமான உறுப்பின் பகுதியை அல்லது உறுப்பு முழுவதையும் பற்றிய வியாதிகளைக் குணமாக்குதல். மறதியைப் போக்கி, மூளைக்கு நினைவுத் திறனைத் தருதல், நரம்புக் கூட்டங்களை வன்மையடையச் செய்தல், மனதை ஒருநிலைப்படுத்தி அறிவை வளர்த்தல், மூப்பை ஒழித்து ஆயுள் வளர்த்தல்.

சுத்திகரித்தல் 

“ஆகாத கன்மச மகற்ற முறை(மை) கேளு

வாகான கல்லுப்பு மாட்டு சமபாகன்

தாகான குமரிப்பூ சாறொடு மூன்றுதான்

பாகாய்க் கழுவிப் பதனமாய் வாங்கிட….” (திருமந்திரம்)

அதாவது, இரசத்திலுள்ள சகடுகள் அகற்ற ஒருமுறையைக் கேளு. ;கல்லுப்பை இரசத்திற்கு இணையாக எடுத்துக்கொண்டு, குமரிச் சாற்றைச் சேர்த்து மூன்று நாள் அரைத்துக் கழுவி எடுத்துக்கொள்; என்று பாடலில் விளக்கியுள்ளார் திருமூலர்.

கொங்கணச் சித்தரும் ஒரு வழியை முன்வைத்துள்ளார். இதனை, “உப்பது பலமும் நாறு……. ஆறொன்றும் போடும் பாரே|| எனும் பாடல் மூலம் அறியலாம். அதாவது, உப்பை நான்கு பலம் எடுத்துக் கவ்வத்திலிட்டு அதில் எட்டு பலம் சூதத்தை விட்டு, அதில் குமரிச்சாற்றை வார்த்து மூன்றுநாள் ஊற வைக்கத் தூய்மையாகும். ஒரு பலம் இரசத்தினை செங்கல் மாத் தூளிலும், மஞ்சற் பொடியிலும் ஒவ்வொரு மணிநேரம் ஆட்டி, சுத்த நீரில் கழுவி ஒருபடி (1.3L) குப்பைமேனிச் சாற்றிலிட்டு அடுப்பிலேற்றிச் சாறு சுண்டும்படி எரித்து எடுக்கச் சுத்தியாகும் .சித்தர் பெருமக்களின்

பாஷண வகைகளில் ஒன்றாகக் காணப்படும் பாதரசத்தினைச் சற்றுக் கடினமான உலோகமாக மாற்றி மணியாகச் செய்து கொள்வதே இரசமணி என அழைக்கப்படும். பாதரசத்தை மணியாக மாற்றுவது இரசவாதக் கலையின் ஒரு பகுதியேயாகும். இதிலிருக்கும் நீரையும் காற்றையும் பிரித்தெடுப்பது தான் மிக இரகசியமாகக் கையாளப்படுகின்றது. இந்த இரசமணிகளைக் கயிற்றில் கோர்த்து உடலில் அணிந்து கொண்டால் உடலிலுள்ள முப் பிணிகளுக்கும் காரணமான வாதம், பித்தம், கபம் ஆகிய எதையும் கிரகித்துக் கொள்ளும். இத் தன்மை இயற்கையாகவே அமைந்திருப்பதால் நாம் எந்தச் சத்தை அதற்குக் கொடுக்கிறோமோ அதை உள்ளுக்குள் இழுத்துப் பயன்தரும். இதனாலேயே யோகா நிலைக்குச் சென்று ஞானத்தை அடைய விரும்புபவர்கள் அதைப் பயன்படுத்தி ஞானநிலையை அடைந்தனர்.

இவ்வாறு சிறப்பு மிக்க இரசத்தை அறிந்து அதனை மருத்துவத்திற்காகவும் ஞானம் அடையவும் பயன்படுத்தி உலகத்தார் உய்யும் வண்ணம் ஆக்கி அளித்த பெருமை சித்தர்களையே சாரும். சித்தர் பெருமக்களின் அற்புதம் நிறைந்த கலைகளுள் பாதரசமும் ஒன்று எனலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]