சிட்னி பொன்டி கடற்கரை ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இளவரசர் ஹரி மற்றும் மேகன்

சிட்னி பொன்டி கடற்கரை ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இளவரசர் ஹரி மற்றும் மேகன்

அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் ஆகியோர் சிட்னி பொன்டி கடற்கரையில் இடம்பெற்ற கேளிக்கை ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

அவர்கள் இன்று காலை அவுஸ்ரேலிய நேரம் 8.30 அளவில் பொன்டி கடற்கரைப் பகுதிக்கு சென்றிருந்தனர்.

கடலோடி சமூகமான ‘வன் வேவ்’ குழுவின் உறுப்பினர்களை சந்தித்த ஹரி மற்றும் மேகன், ‘ப்ளூரோ ப்ரைடே’ என்ற சம்பிரதாய நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

அங்கு வண்ணமயமான நியோன் மற்றும் செயற்கை பூக்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட இருவரும், மனநல மேம்பாடு குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

கடற்கரை மணலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இருவரும் காலணிகளை மறந்து நெடு நேரம் நடந்து சென்றனர்.

பொன்டி கடற்கரையில் கூடியிருந்த ஏராளமானவர்கள் அரச குடும்ப தம்பதியை காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை சிட்னி பொன்டி கடற்கரை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]