‘சிங்கள மொழி அழிந்து வரும் நிலையில்’

சிங்கள மொழி அழிந்து வரும் நிலையில் உள்ளதாக முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கள மொழி நாட்டின் அதிகாரபூர்வமான மொழியாக இருந்தாலும், அது அழிந்து வரும் நிலையில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த உண்மை நிலையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற புலமைபரிசில்கள் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]