சிங்கள மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்

சிங்கள மக்கள்புதிய அரசியலமைப்பு தொடர்பில் அப்பாவி சிங்கள மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மஹிந்த அணி உறுப்பினரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் மீதே சம்பந்தன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக அவர் தமது டுவிட்டர் தளத்தில் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

இரவுநேர நிகழ்வொன்றில் பங்கேற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் குற்றச்சாட்டை ஜீ.எல்.பீரிஸிடம் முன்வைத்ததாக, அது தொடர்பான புகைப்படமொன்றையும் பதிவிட்டு பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த கருத்துக்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியூதீன் ஆகியோர் உட்பட தாமும் சாட்சி என்றும் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு முற்றிலும் ஒரு அற்புதமானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளது.

எனவே, இதற்கு ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஒன்றிணைந்த எதிரணியினர் ஆகியோரின் ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரியதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]