சிங்கள தேசிய கட்சிகள் இனவாத்தை மூலதனமாக கொண்டு செயற்படுபவை

சிங்கள தேசிய கட்சிகள்

சிங்கள தேசிய கட்சிகள் இனவாத்தை மூலதனமாக கொண்டு செயற்படுபவை

மக்களின் இனப்பிரச்சனை தொடர்பில் தந்தை செல்வா முதல் சம்பந்தன் ஐயா வரை பேச்சுவார்தைகளில் ஈடுபட்ட போதிலும் இறுதி முடிவு கிடைக்காமைக்கு சிங்கள தேசிய கட்சிகளே காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்கப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

சிங்கள தேசிய கட்சிகளை இனவாத்தை மூலதனமாக கொண்டு செய்படுபவை அவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக மக்கள் மத்தியில் இனவாதத்தை முதலீடு செய்பவர்கள் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு சின்னஊரணியில் தமிழை; தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் அலுவலகத்தை சனிக்கிழமை (06) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாறுகையில் – ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியானது அடிப்படை சிங்களவாதத்துடன் 1951 ஆம் ஆண்டு ஆரமப்பிக்கப்பட்டது. 1956 ஆண்டு தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ஆட்சிக்கு வந்தால் 24 மணிநேரத்துக்களுள் தனிச் சிங்கள சட்டத்தை அமுல்ப்படுத்துவேன் என்ற தமிழ் மக்களுக்கு விரோதமான கொள்கைகளை முன்வைத்தது சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

1958ல் தமிழர்களுக்கு எதிராக மிக மோசமான இனக்கலவரம் அரங்கேற்றப்பட்டது அதில் குழந்தைகள் கூட பலிக்கிடாக்களாக்கப்பட்டார். இவ்வாறு அநியாயம் செய்த கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி.

1964ல் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் மூலம் மலையக தமிழர்களை நாட்டை விட்டு வெளியேற்றியதும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே.

1972ம் ஆண்டு புதிய அரசியல் யாப்பிலே சிங்களம் அரச கரும மொழி பௌத்தம் அரச மதம் என மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் தமிழர்கள் பின்னிலைப் படுத்தப்பட்டார்கள். 1987ல் கொண்டுவரப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள் 1995களில் செம்மணி புதை குழியிலி 600 மேற்பட்ட எமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டதும் ஸ்ரீலங்கத சுதந்திர கட்சி காலத்திலே நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் படுகொலையை அரங்கேற்றியதும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்டியே இதை நாங்கள் எப்போதும் மறந்துவிடக் கூடாது.

1957ம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தம் கொண்டுவந்த போது அதனைக் கிழித்தெறிய வேண்டும் என கண்டிப் பாதயாத்திரை செய்து அந்த ஒப்பந்தத்தை கிழித்தெரியச் செய்தவர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்தன.

1965ல் டட்லி – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் கைவிட்டதும் ஐக்கிய தேசிய கட்சிதான். 1983ல் மிக மோசமான இனக்கலவரத்தை அரங்கேற்றியது ஐக்கிய தேசிய கட்சி.

பயங்கரவாத தடைச் சட்டம் என்ற மோசமான சட்டத்தைக் கொண்டுவந்து சாட்சியங்களே இல்லாமல் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வேட்டையாடப்பட்டதும் ஐக்கிய தேசிய கட்சி காலத்திலே தேசிய இரண்டு கட்சிகளும் எங்ளுடைய பிரச்சினையைத் தீர்த்துவைக்கவில்லை. தற்போத தீர்ததுவைப்பதாகக் கூறி செயற்படுகிறார்கள் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]