சிங்கப்பூர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்

இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 200 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஆட்சியமைக்கும் போது டொலரின் பெறுமதி 105 ரூபாயாக இருந்தாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது டொலரின் பெறுமதி 131 ரூபாயாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாடு பல்வேறு சிக்கலுக்கு மத்தியிலும் ரூபாயின் குறைந்த பட்ச பெறுமதி நூற்றுக்கு 1.98 என்ற அடிப்படையில் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்களில் ரூபாயின் குறைந்தபட்ச பெறுமதி நூற்றுக்கு 6.5 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தற்போது பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]