சிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ

பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ

சிங்கப்பூருக்கு பயணமானார் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு இன்று முற்பகல் பயணமாகியுள்ளார்.

சிங்கப்பூரில் நான்கு நாட்கள் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்குள்ள இலங்கை பிரஜைகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணைந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயத்தை நிறைவுசெய்துகொணடு 19ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]