சிங்கப்பூருக்கு செல்கிறார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கையில் முதலீடு செய்வது குறித்த மாநாட்டில் பங்கேற்கவே பிரதமர் சிங்கப்பூர் செல்லவுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிராந்தியத்தின் முக்கியமான முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கு முன்னதாக, இலங்கை முதலீடு என்ற பெயரிலான மாநாடுகள், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.