சிங்கங்களை வேட்டையாடி வரலாறு படைத்த வங்கதேசப் புலிகள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் கிரிக்கெட் வரலாற்றில் இந்த வெற்றி ஒரு மையில் கல்லாகவே பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த அணிகளின் ஒன்றான இலங்கை அணிக்கு பங்களாதேஷ் அணியின் விஸ்வரூம் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு தலைசிறந்த அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் தற்போதுதான் வீழ்த்தியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 338 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டையும் இழந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் 300 பந்துகளில் 10 பவுண்ரிகள், 1 சிக்ஸர் அடங்களாக 138 ஓட்டங்களையும், டி. சில்வா மற்றும் டிக்வெல்ல ஆகியோர் தலா 34 ஓட்டங்கள் என்ற அடிப்படையிலும் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபி ரஹமான், சஹிப், சமசிஸ் ரோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றிக்கொண்டனர்.

பதலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 467 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் சர்கார் 61 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 49 ஓட்டங்களையும், சஹிப் 116 மற்றும் ஓசைன் 52 என்ற அடிப்படையில் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். அத்துடன், ரஹ்மான் 42, கயிஸ் 34 என்ற அடிப்படையில் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கைச் சார்பில் லக்ஷõன் சன்டகன் மற்றும் ஹேரத் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

பதிலுக்குத் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 319 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், கருணாரத்ன 126 ஓட்டங்களையும் பெரேரா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், சஹிப் 4 விக்கெட்டுகளையும் முஸ்தாபி ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

191 என்ற வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளை மாத்திரமிழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில், தமிம் இக்பால் 82 ஓட்டங்களையும் சபிர் ரஹ்மான் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஹேரத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்டுத் தொடர் 11 என சமநிலைப் பெற்றுள்ளது.