சிக்கல்களில் சிக்கினாலும் சிக்கென வெளியாகிய பத்மாவதி ட்ரைலர்

பத்மாவத்

தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் பத்மாவத்.

இந்த திரைப்பத்திற்கு பெயர் வைத்த காலம் தொடக்கம் இன்றுவரை பல்வேறு சிக்கல்கள் படக்குழுவுக்கு தோன்றி வருகிறது. இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தை தவறான முறையில் சித்தரிப்பதாக அந்த வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

பத்மாவத்

மேலும் இந்த படத்தின் கதாநாயகிக்கும் இயக்குனருக்கும் பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்தது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் வெளியாகவேண்டிய இந்த திரைப்படம் தாமதமானது.

பத்மாவத்

பத்மாவத் வெளியிடப்பட்டால் சட்டஒழுங்கு குலையும் என்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் சென்சார் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பத்மாவத்

இந்த திரைப்படமானது எதிர்வரும் 25ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பத்மாவதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில், வசூல் சாதனையை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]