முகப்பு Cinema சிக்கலில் சிக்கிதவிக்கும் விஸ்வாசம்- குழம்பி தவிக்கும் தல ரசிகர்கள்!!

சிக்கலில் சிக்கிதவிக்கும் விஸ்வாசம்- குழம்பி தவிக்கும் தல ரசிகர்கள்!!

அஜித் நடிப்பில் இறுதியாக விவேகம் படம் வெளியாகி இருந்தது, இந்த படம் பல சாதனைகளை படைக்கும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றமே கிடைத்தது.

இதனையடுத்து சிவா இயக்கத்தில் நடித்தது போதும் என அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கூறியும் அஜித் மீண்டும் விஸ்வாசம் படத்திற்காக சிவாவுடன் இணைந்துள்ளார்.

இந்த படம் மார்ச் மாதமே தொடங்கி தீபாவளிக்கு ரிலீசாக இருந்தது. ஆனால் தமிழ் சினிமா ஸ்ட்ரைக் தொடங்கி விட்டதால் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காமல் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் மே முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று கூறி இருப்பதால் படக்குழுவினர் படத்தை எப்படி முடிப்பது என தெரியாமல் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தல ரசிகர்களும் சொன்னபடி தீபாவளிக்கு பட ரிலீஸ் ஆகுமா? இல்லை தள்ளி போகுமா என தெரியாமல் கடும் குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com