சிகை அலங்கார நிலையத்திற்கு செல்லும் பெண்களே உஷார்- உங்களுக்கும் இதுப்போன்று நடக்கலாம்!!

தெரியாதவர்களிடம் தலையை கொடுக்காதீர்கள் என தலை முடியை இழந்த பெண் ஒருவர் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுப்போன்ற நிலை நாளை உங்களுக்கும் நடக்கலாம்- உஷார் பெண்களே……

ஜோர்ஜியாவை சேர்ந்த 20 வயதுடைய Sierra Baynes என்ற பெண் தனது சிகையை அலங்காரம் செய்வதற்காக சிகை அலங்கார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு விடயம் தெரியா சிகை அலங்கரிப்பாளர் Sierra-வின் தலை முடியை பின்னல் பேடும் போது மிக இறுக்கமாக கட்டியுள்ளார். இதனால் சிறிது நேரத்தில் அவரது தலையில் இருந்து ரத்தம் வர தொடங்கியதுடன் முடியும் கொத்து கொத்தாக உதிர்ந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி தலையை மொட்டை அடித்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில் 

எனக்கு நடந்த கொடுமையால் தற்போது விக் வைத்துள்ளேன். சிகை அலங்காரத்திற்காக நீங்கள் செலவு செய்கிறீர்கள் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நியாயமான சேவை கிடைப்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யுடியூப்பில் அவர் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]