சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

பெருந்தொகை சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இரத்தினபுரி பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி – முவகம பாலத்திற்கு அருகில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

cigarette

மேலும் இவர் வசம் இருந்து வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான சிகரெட்டுக்கள் 2500 மீட்கப்பட்டுள்ளது.

இவரை இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.