சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்  செலுத்தினர்

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்  செலுத்தினர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்

வடக்கில் உள்ளூராட்சிசபை தேர்தல் இடம்பெறவுள்ள ஒரே ஒரு நகரசபையான சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணம் செலுத்தயுள்ளது.

இருபத்தொரு உறுப்பினர்களைக்கொண்ட யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்கள் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தினரால் கோரப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இன்றைதினம் முதலாவது கட்சியாக ஈ.பி.டி.பி கட்சியினர் தாம் போட்டியிடுவதை உறுதிப்படுத்தி கட்டுப்பணத்தை யாழ் மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஏ.அகிலனிடம் செலுத்தி வேட்பாளர் விண்ணப்பப்படிவத்தை பெற்றுள்ளனர்.

இக்கட்சி சார்பில் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் இந்த கட்டுப்பணத்தை செலுத்தினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]