சாவகச்சேரியில் 18 லட்சம் கொள்ளை

சாவகச்சேரியில் 18 லட்சம் கொள்ளை

சாவகச்சேரி நகரத்தில் ஏ9 பிரதான வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றிலிருந்து இன்று காலை 8.30 மணிக்கு சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள், பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர். இதன்போது கத்தியோடு உள்நுழைந்த திருடன் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளான். உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]