சாலை விபத்தில் பிரபல பாடகரின் மகள் சம்பவ இடத்திலேயே பலி- புகைப்படம் உள்ளே

திருவனந்தபுரத்தில் நடந்த சாலை விபத்தில் மலையாள திரையுலகின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான பாலாபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கினர். இந்த விபத்தில் அவரின் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பாலாபாஸ்கர் திருச்சூரில் உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

தரிசனம் முடிந்த பின்னர் தன் காரில் திருவனந்தபுரம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார். அவரின் ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளார். காரில் பாலாபாஸ்கர் அவரின் மனைவி லட்சுமி மற்றும் மகள் தேஜஸ்வி ஆகியோர் பயணம் செய்துள்ளனர். விடியற்காலை 4.30 மணியளவில் கார் திருவணந்தபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

சாலை விபத்தில்

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மகள் தேஜஸ்வி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பாலாபாஸ்கர் அவரின் மனைவி, ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]