சாலையோரம் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுடன் கிரிக்கெட் ஆடியுள்ள சச்சின்- வைரல் வீடியோ உள்ளே!!

மும்பை சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்த சச்சின் காரிலிருந்து இறங்கிவந்து சாலையோரம் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுடன் கிரிக்கெட் ஆடியுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தவர். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 1989லிருந்து 2013வரை மூன்று தலைமுறை ரசிகர்களை தன்வசப் படுத்தியவர்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 2013 அக்டோபர் மாதம் 23ம் தேதி அனைத்து கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து கண்ணீருடன் விடைபெற்றார். இறுதிவரை நேர்மையான கிரிக்கெட் வீரராக விளையாடி ஓய்வுபெற்றவர். உலகளவில் அதிக சதம் அடித்த வீரர் எனும் பெருமைக்குரியவர். அவரது ஆட்டத்தை காண இன்றும் பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்த போது, மும்பையில் சாலையோரம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை கண்டுள்ளார். உடனே காரிலிருந்து இறங்கி வந்து அவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அந்த வீடியோவை சச்சினின் பள்ளி நண்பரும் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இறுதியாக சச்சினுடன் விளையாடிய இளைஞர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சச்சினின் ஆட்டத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த ரசிகர்கள் பலரும் வினோத் காம்ப்ளிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]