சாலையில் பெண்களை பார்த்துக் கொண்டு சுய இன்பம் அனுபவிக்கும் இளைஞன்- பாகிஸ்தானில் சம்பவம்!!

சாலையில் பெண்களை பார்த்துக் கொண்டு சுய இன்பம் அனுபவித்த பாகிஸ்தான் இளைஞரின் ஆணுறுப்பை வெட்டவேண்டுமென இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.

பெண்கள் மீதான அத்துமீறல்கள் வன்முறைகளுக்கு எதிரான குரல்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் உலகம் முழுவதும் பெண்கள் மீதான சீண்டல்களும், வன்முறைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

அந்த வகையில், பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்த படி, அருகில் நின்று கொண்டிருந்த வேனில் இருக்கும் பெண்களை பார்த்துக் கொண்டே சுய இன்பம் அனுபவித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்களை பார்த்துக் கொண்டே இளைஞர் ஒருவர் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகளை கண்ட பெண் ஒருவர், அந்த இளைஞரை புகைப்படம் எடுத்துள்ளார். இதைப் பார்த்தவுடன் அந்த நபர், துணியால் தனது முகத்தை மறைக்க முற்பட்டுள்ளார்.

வேனில் இருந்த பெண்ணின் தோழி ஒருவர், இது தொடர்பான கோபமான கருத்துப் பதிவை, “பாகிஸ்தான் ஸ்பீக்ஸ்” எனும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது :
“என் தோழி ஒருவர் அவரது பல்கலைக்கழக வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு வாகனத்திற்காக அவர்களது வேன் காத்துக் கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் வேனில் இருந்த பெண்களை பார்த்து சுய இன்பம் அனுபவித்துள்ளார்.

இதனை கண்ட எனது தோழி அந்த இளைஞரை புகைப்படம் எடுத்த போது, துணியால் தனது முகத்தை மறைக்க அவர் முற்பட்டுள்ளார். ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த இளைஞரை திட்ட எனது தோழி முயற்சித்த போது, அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
பொது இடங்களில் பாலியல் அத்துமீறல்கள் பெண்களுக்கு மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இதேபோன்று பல்வேறு நிகழ்வுகளை நானும, எனது தோழிகளும் சந்தித்துள்ளோம். இதுபற்றி வெளியில் சொன்னால் என்னையே வசை பாட ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இது போன்ற சம்பவங்களை என்னுடைய சிறு வயதில் நான் யாரிடமும் கூறியது இல்லை. இது போன்று நடந்து கொள்ளும் ஆண்களின் உறுப்புகளை பொதுவெளியில் வெட்டி எறிந்துவிட வேண்டும்” என கோபத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த முகநூல் பதிவும், புகைப்படமும் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. சிலர் அந்த இளைஞரை கடுமையாக விமர்சித்தாலும், ‘என் உடம்பு, என் விருப்பம்’ என ஒரு சில ஆண்கள் அவருக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ‘உங்களது உடம்பு; நீங்கள் அதனை எதுவேண்டுமானாலும் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அது மற்றவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தினால் நீங்கள் குற்றம் செய்கிறீர்கள்’ என்று எதிர் பதிவுகள் காட்டமாக முன்வைக்கப் படுகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]