வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான எழுத்து மூலப் பரீட்சையில் மாற்றம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதி முதல் புதிய முறையில் எழுத்து மூலப் பரீட்சை நடத்தப்படும் என, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எழுத்து மூலப் பரீட்சையில் இடம்பெறுகின்ற மோசடிகளை தடுத்தல் மற்றும் விரைவாக பெறுபேறுகளை வெளியிடுதல் போன்ற காரணங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறினார்.
அதன்படி, முதலில் வெஹரஹர காரியாலயத்தில் புதிய முறையில் எழுத்து மூலப் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]