சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 18-ஆம் திகதிவரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

இதில் ‘டாப்8’ நாடுகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இருக்கின்றன.

சாம்பியன்ஸ் ‘டிராபி’ போட்டிக்கான 7 நாட்டு அணி வீரர்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்பதை நேற்று தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

காயத்தில் இருந்து குணமடைந்த ரோகித்சர்மா, முகமது ‌ஷமி ஆகியோர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார்கள். இருவரும் முழு உடல்தகுதி பெற்றனர். காயம் காரணமாக விளையாட இயலாத ராகுலுக்கு பதிலாக தவான் சேர்க்கப்பட்டார்.

இதேபோல ஐ.பி.எல்.லில் காயத்தால் விளையாடாத அஸ்வின் உடல் தகுதி பெற்று அணியில் இடம் பெற்றார்.

15 பேர் கொண்ட அணியில் மனிஷ்பாண்டேவுக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம்,

வீராட்கோலி (தலைவர்), ரோஹித் சர்மா, தவான், ரகானே, கேதர்ஜாதவ், யுவ ராஜ்சிங், டோனி, மனிஷ் பாண்டே, ரவிந்திர ஜடேஜா, ஹார்த்திக் பாண்ட்யா, புவனேஷ் வர்குமார், உமேஷ் யாதவ், பும்ரா, ஆர்.அஸ்வின், முகமது ‌ஷமி.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, ஜூன் 4- ஆம் திகதி பாகிஸ்தானுடனும், ஜூன் 8-ஆம் திகதி இலங்கையுடனும், ஜூன் 11- ஆம் திகதி தென்ஆப்பிரிக்காவுடன் மோதஉள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]