சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தானுக்கு உற்சாக வரவேற்பு

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிக்கு சொந்த மண்ணில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி பகர் சமானின் (114) சதத்தால் 338 ஓட்டங்களை குவித்தது. பின்னர் 339 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

ரோகித் சர்மா, கோலி, தவான் ஆகிய முக்கிய விக்கெட்டுக்களை மொகமது ஆமிர் 33 ஓட்டங்களுக்குள் வீழ்த்தியதால் இந்தியா 158 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி இந்தியாவை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது.
சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. லண்டனில் உள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணி இன்று சொந்த நாடு திரும்பியது. அங்கே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

சாம்பியன்ஸ்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]