சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு ஸ்டார்க், லின் சேர்ப்பு ; பால்க்னெர் நீக்கம்

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான பல்க்னெருக்கு இடம் கிடைக்கவில்லை. ஸ்டார்க் மற்றும் லின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இங்கிலாந்தில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதிவரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐ.சி.சி.யால் நடத்தப்படுவதால் இந்தத் தொடர் உலகக்கிண்ணத்திற்கு நிகரானது என்பதால் அனைத்து அணிகளும் கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் உள்ளது.

கடந்த முறை நடைபெற்ற தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 3ஆவது முறையாக அந்த அணி கிண்ணத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி

இதற்கேற்ற வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் தொடரின்போது காயத்தால் விலகிய மிட்செல் ஸ்டார்க், ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய கிறிஸ் லின் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னணி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் ஷேன் மார்ஷ், கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜார்ஜ் பெய்லி போன்றோருக்கும் இடம் கிடைக்கவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:
1. ஸ்டீவன் சுமித் (தலைவர்), 2. வார்னர், 3. ஆரோன் பிஞ்ச், 4. மேக்ஸ்வெல், 5. மேத்யூ வடே, 6. கிறிஸ் லின், 7. ஹென்றிக்ஸ், 8. கம்மின்ஸ், 9 ஹாஸ்டிங்ஸ், 10. ஹசில்வுட், 11. டிராவிஸ் ஹெட், 12. பேட்டின்சன், 13. மிட்செல் ஸ்டார்க், 14. ஸ்டோய்னிஸ், 15. ஆடம் ஜம்பா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]