சாம்சனின் அதிரடி சதத்தால் டெல்லி டேர்டெவில்ஸ் புனேயை வீழ்த்தியது

சாம்சனின் அதிரடி சதத்தால் டெல்லி டேர்டெவில்ஸ் புனேயை வீழ்த்தி முதல் வெற்றியைபெற்றது.

புனேயில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதிரடியாக ஆடிச 22 வயதுடைய சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதில் 8 பவுண்டரி, 5 சிக்சர்களும் அடங்கும்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் அணி 16.1 ஓவர்களில் 108 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றியை பதிவுசெய்திருந்தது.

புனே அணி தரப்பில் மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஜாகீர்கான், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இளம் வயதில் சதம் அடித்தமை குறித்து கூறிய ஆட்டநாயகன் விருது பெற்ற டெல்லி அணி வீரர் சஞ்சு சாம்சன்,

எனது ஆட்டம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் எனது ஆட்டத்தால் அணி வெற்றி பெற்றது மிகமிக மகிழ்ச்சியை அளிக்கிறது. ராகுல் டிராவிட்டின் ஆலோசனை மிகுந்த பலனை அளித்தது.

இந்த ஆட்டம் என் வாழ்நாளில் சிறந்த ஆட்டமாகும். தொடர்ந்து இதே மாதிரி சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்கு வகிக்க விரும்புகிறோம்.அ இந்திய அணியில் விளையாடுவதே எனது கனவாகும் என்றார்.

சாம்சனின் அதிரடி சாம்சனின் அதிரடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]