சாமி நடிகரை ஏமாற்றும் தயாரிப்பாளர்

சாமி நடிகர் புதுப்படங்களில் நடிப்பதற்கு சம்பளமாக ரூ.3 கோடி பெறுகிறார். ஒரு வருடத்துக்கு முன்பு நண்பரான தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் சாமி நடிகர். தயாரிப்பாளர் ரூ.75 லட்சம் முன்பணமாக நடிகரிடம் கொடுத்துள்ளாராம். மீதி பணத்தை ‘டப்பிங்’ பேசுவதற்கு முன்பு கொடுத்து விடுவதாக வாக்குறுதி கொடுத்தாராம்.

ஆனால் அத்தயாரிப்பாளர் அவர் சொன்னபடி, மீதி பணத்தை கொடுக்கவில்லையாம். “இதோ கொடுக்கிறேன்…அதோ கொடுக்கிறேன்” என்று இழுத்தடித்ததால் படத்துக்கு, ‘டப்பிங்’ பேச மறுத்து விட்டாராம், ‘சாமி’ நடிகர். “இரண்டே கால் கோடியை கொடுங்கள். உடனே ‘டப்பிங்’ பேச வருகிறேன்” என்று அவர் நிபந்தனை விதித்து இருக்கிறாராம்!