சாதி பார்த்து கதை கேட்கும் இளம் ஹீரோ!

 

ஒரு பக்கம் சுசீந்தரன், ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் சாதிக்கு எதிராக சாட்டை வீசும் படங்களாக எடுத்துக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் சாதியை தூக்கி பிடிக்கும் சினிமாக்காரர்களும் இருக்கிறார்கள்.

சிம்மக் குரலோனின் குடும்பம் சினிமாவுக்கும் பாரம்பர்யத்துக்கும் எப்படி பேர் பெற்றதோ அதே போல் சாதி விஷயத்திலும் பேர் பெற்றது. சாதிப் பார்த்துதான் அன்னம் தண்ணீர் புழங்குவார்கள். இது இன்னும் வளர்ந்து கதை கேட்கும் விஷயம் வரை வந்து விட்டதாம்.

திலகத்தின் பேரன் இப்போது முன்னணி ஹீரோவாக இருக்கிறார். அவருக்கு கதை கேட்கும்போது பெரிய டைரக்டர்கள் என்றால் எந்த கண்டிஷனும் இல்லாமல் கேட்கிறார்கள்.

ஆனால் புது இயக்குநர்கள் என்றால் அவர்களிடம் முதலில் சாதி கேட்டு தான் பின்னர் தான் கதையே கேட்கிறார்களாம். இதனாலேயே பேரனுக்கு சரியான கேரியர் அமையாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.