கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச்சேர்ந்த 17 வயது மாணவி லதா என்பவரின் குடும்பத்தை 5 வருடங்களுக்கு முன்பு சாதிப்பாகுபாடு காரணமாக அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளனர். கிராமத்தினர் யாரும் இவர்களுடன் பேசுவதில்லை. இது குறித்து நாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பிரதமர் மோடிக்கும் கடிதங்கள் எழுதப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த லதா, பின்னர் இனி நான் வாழ்வதற்கான எந்தக் காரணமும் இங்கு இல்லை எனக்கூறி தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது குறித்து பேசிய லதாவின் தந்தை, தற்கொலைக்கு முயன்ற என் மகள் தற்போது தேறி வருவதாகவும்,24 மணிநேர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் பாட்டிலின் பெயரைச்சொல்லிதான் எனது இடம் பிடுங்கப்பட்டது. நாங்கள் அவரிடத்தில் புகார் தெரிவித்தும் பயனில்லை. காவல்துறையிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
லதாவின் உடல் தேறியபிறகு விசாரணை முடுக்கிவிடப்படும். லதாவின் தந்தை அளித்த புகாரின்படி விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]